
தென்காசி, ஜூலை 23-
குற்றாலம் சாரல் விழாவில் மூன்றாம் நாளான நேற்று ஐந்தருவி சாலை படகு குழாமில் படகு போட்டி நடத்தப்பட்டது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டி நடந்தது. போட்டியை குற்றாலம் தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் சுரேஷ்குமார், சுற்றுலாத்துறை அலுவலர் சந்திரகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
பெண்கள் பிரிவில் சத்யா, லட்சுமி முதல் பரிசையும், இசக்கியம்மாள், சுகன்யா இரண்டாவது பரிசையும், புனிதா, கீர்த்திகா மூன்றாவது பரிசையும் பெற்றனர். இதேபோல் ஆண்கள் பிரிவில் கணேஷ், வசந்த் முதல் பரிசையும், அருண்ராஜ், குமார் இரண்டாவது பரிசையும், கண்ணன், ஹரி விகாஸ் மூன்றாவது பரிசையும் பெற்றனர்.
கலைவாணர் கலையரங்கத்தில் சிலம்ப போட்டி, மாணவ, மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சி, கரகாட்டம், பரதநாட்டியம், கிராமிய கலைநிகழ்ச்சி, தோடர் நடனம், திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?