நாடு முழுவதும் ரயில்வே கேட் அமைந்திருக்கும் பகுதியில் CCTV கட்டாயம்...! அமைச்சர் அதிரடி உத்தரவு..!

நாடு முழுவதும் ரயில்வே கேட் அமைந்திருக்கும் பகுதியில் CCTV கட்டாயம்...! அமைச்சர் அதிரடி உத்தரவு..!

ரயில்வே கேட் அமைந்திருக்கும் லெவல் கிராசிங் பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு 11 முக்கிய நடைமுறைகளை பின்பற்றும் படி இந்திய ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.


கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் கடந்த 8-ம் தேதி பள்ளி வாகனம் மீது பாசஞ்சர் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியம் ஒரு காரணமாக என சொல்லப்படுகிறது. மேலும் இந்த கேட்டில் இன்டர்லாக்கிங் செய்யப்படாமல் இருந்தது மற்றொரு காரணம் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் தலைமையில் நேற்று ரயில்வே பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ரயில்வே கேட் அமைந்திருக்கும் லெவல் கிராசிங் பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு 11 முக்கிய நடைமுறைகளை பின்பற்றும் படி இந்திய ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.


அதன்படி, அனைத்து ரயில்வே கேட் பகுதிகளிலும் போதிய பதிவு அமைப்புடன் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் பகுதிகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். சோலார் சாதனம், பேட்டரி மூலமாகவும் மின்சாரம் வழங்கலாம். இதை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். இதுபோல, அனைத்து ரயில்வே கேட்களையும் இன்டர்லாக்கிங் முறைக்கு மாற்ற வேண்டும்.


இன்டர்லாக்கிங் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்படாத ரயில்வே கேட்களை நாள்தோறும் ஆய்வு செய்யவேண்டும். ரயில்வே சுரங்கப்பாதை, மேம்பாலம் அமைக்கும் கட்டுமான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இன்டர்லாக்கிங் செய்யப்படாத கேட்களில் குரல் பதிவு அமைப்பு செயல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து ரயில்வே கோட்டங்களிலும் இன்டர்லாக்கிங் செய்யப்படாத ரயில்வே கேட் பகுதிகளில், ரயில் வருவதை ஒலி பெருக்கிகள் மூலமாக அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%