ஹாக்கியில் தமிழக அணி வெற்றி!

ஹாக்கியில் தமிழக அணி வெற்றி!

சென்னை:

எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ‘ஏ' பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு - இந்திய ராணுவ அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


தமிழ்நாடு அணி தரப்பில் பாலசந்தர் 34 மற்றும் 59-வது நிமிடங்களில் பீல்டு கோல் அடித்து அசத்தினார். சதீஷ் (14-வது நிமிடம்), பட்ராஸ் திர்கே (32-வது நிமிடம்), மனோஷ் குமார் (57-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.


மற்ற ஆட்​டங்​களில் என்​சிஒஇ (போ​பால்) 4-2 என்ற கோல் கணக்​கில் மகா​ராஷ்டி​ராவை​யும், ஐஓசி 2-0 என்ற கோல் கணக்​கில் மத்​திய நேரடி வரி​கள் வாரி​யம் அணி​யை​யும் தோற்​கடித்​தன.


இன்று நடை​பெறும் ஆட்​டங்களில் இந்​தி​யன் ரயில்வே - இந்​திய ராணுவம், கர்​நாடகா - ஐஓசி, மலேசிய ஜூனியர் நேஷனல் - இந்​திய கடற்​படை அணி​கள்​ மோதுகின்​றன.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%