ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களைப்பற்றி தனது நண்பரிடமோ அல்லது வேறு உறவினரிடமோ புகார் கூறுகிறார்... அந்தப் புகாரில் உண்மையிருக்கும்... அதைக் கேட்கும் நண்பரோ உறவினரோ அவர்களது குடும்ப உறுப்பினர் பற்றி மிகைப்படுத்தி புகாரை ( அதில் உண்மையிருக்காது ) கூறினால் அதில் நகைச்சுவை இருக்கும்.
உதாரணங்கள் நிறைய சொல்லலாம்... சிலவற்றை ஜோக்காக உதிர்க்கிறேன்...👇
" என்னோட எட்டு வயசு பையன் வகுப்புல எப்ப பார்த்தாலும் நகத்தை கடிச்சிட்டேயிருக்கான்... என்ன செய்றதுன்னே தெரியலே...!? "
" என்னோட பையன் வகுப்புல பக்கத்துல உள்ள பையன் நகத்தையும் சேர்த்து கடிக்கறானே...! "
---------------------------------------------
" என்னோட வீட்டுக்காரரு ஒரு வேலையும் செய்ய மாட்டேன்ங்கறாரு... எப்ப பார்த்தாலும் டிவி முன்னாடியே உட்கார்ந்திருக்காரு...!? "
" எங்க வீட்டுல ஒரு வாரமா டிவி ரிப்பேர்... அப்படியிருந்தும் என் வீட்டுக்காரரு டிவி முன்னாடியே உட்கார்ந்திருக்காரே...! "
---------------------------------------------
" எங்கப்பா சரியான கஞ்சனாயிருக்காரு...
பள்ளிக்கூடம் போயிட்டு வர ஒரு சைக்கிள் கூட வாங்கித்தர மாட்டேன்ங்கறாரு...! "
" உங்கப்பா பரவாயில்லை... எங்கப்பா சைக்கிள் வாங்கிக் கொடுத்துட்டாரு... டயருக்கு காத்தடைக்க ரூபா கேட்டா வாய வச்சு ஊதியே அடைக்க சொல்றாரு...! "
---------------------------------------------

--லட்சுமி ஆவுடைநாயகம்,
மடிப்பாக்கம்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?