பொங்கலைப் பாடுவோம்

பொங்கலைப் பாடுவோம்



அறுசீர் மண்டிலம்.


பொங்கலோ பொங்கலென்று

பாடுவோம்

புதியதாய்ச் சிந்தனையில்

கூடுவோம்!

கங்குலை நீக்கிடவே

நாடுவோம்

காலமும் கண்ணியமாய்

வாழுவோம்!

எங்குளத் தமிழரெலாம்

வாழ்ந்திட

ஏற்றமாய் உழைத்திடவே

சூழுவோம்!

மங்காத பொங்கலையே

காணுவோம்

மாண்புறு இனிமைதனைப்

பேணுவோம்!


மஞ்சளும் பச்சரிசிச்

சேர்ப்பமே

மண்புகழ்க் கன்னலுமே

ஈர்க்குமே!

நெஞ்சிலே அன்புமட்டும்

தேக்குவோம்

நேர்ந்தநல் பண்பினையே

ஆக்குவோம்!

வஞ்சமில் உறவுக்கும்

பாலமாய்

வண்ணமாய் நட்புக்கும்

கோலமாய்

செஞ்சொலாம் தமிழ்மொழியில்

பாடுவோம்

சேர்ந்துநாம் பொங்கலிலே

கூடுவோம்!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

*திருவண்ணாமலை*.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%