தொழில்நுட்ப கோளாறு: ஜப்பானில் அவசர அவசரமாக தரையிறங்கிய இங்கிலாந்து போர் விமானம்
Aug 11 2025
11

டோக்கியோ,
இங்கிலாந்து விமானப்படையில் அதிநவீன எப்-35 ரக போர் விமானங்கள் உள்ளன. உலகின் மிகவும் அதிநவீன போர் விமானங்களாக எப்-35 ரக போர் விமானங்கள் கருதப்படுகின்றன.
இதனிடையே, அமெரிக்கா - ஜப்பான் - இங்கிலாந்து கடற்படைகள் இணைந்து தென்சீன கடற்பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதில், இங்கிலாந்தின் விமானம் தாங்கி போர் கப்பல்களும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், ஜப்பான் கடற்பகுதியில் தென் சீன கடலில் இங்கிலாந்து விமானப்படைக்கு சொந்தமான எப்-35 ரக போர் விமானம் இன்று காலை 11.30 மணியளவில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக எப்-35 ரக போர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை அறிந்த விமானி, போர் விமானத்தை ஜப்பானின் ககோஷிமா சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவரசமாக தரையிறக்கினார். இதனால், விமான நிலையத்தில் 30 நிமிடங்களுக்கு பயணிகள் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. எப்-35 போர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, கடந்த மாதம் 14ம் தேதி இங்கிலாந்து விமானப்படைக்கு சொந்தமான எப்-35 ரக போர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. 8 நாட்கள் திருவனந்தபுரத்தில் நிறுத்தப்பட்ட அந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டப்பின் கடந்த 22ம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றது.
தற்போது 2வது முறையாக எப்-35 ரக போர் விமானம் ஜப்பானில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?