தெரு நாய்க்கடி விவகாரம் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

தெரு நாய்க்கடி விவகாரம் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்


சென்னை, நவ.2- தெரு நாய்க்கடிகளைத் தடுக்கவும், ரேபிஸ் நோய் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுப்பது குறித்து 2 மாதத்திற்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மேற்குவங்கம், தெலுங்கானா மற்றும் தில்லி மாநகராட்சி ஆகியவை மட்டுமே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தன. இதனையடுத்து 2 மாதம் அவகாசம் வழங்கியும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததால், தமிழ்நாடு உள்ளிட்ட 25 மாநில தலை மைச் செயலாளர்கள் நவ.3 ஆம் தேதி ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், தெரு நாய் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், “தமிழ்நாட்டில் 138 கால்நடை மருத்துவ மனைகள் மூலம் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதலாக 88 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை மாநக ராட்சியில் மட்டும் 5 கருத்தடை மையங்கள் செயல்படு கின்றன. மற்ற 25 மாநகராட்சிகளில் 86 கருத்தடை மையங்கள் செயல்படுகின்றன. நாய்கள் கருத்தடை திட்டத்திற்காக 450 கால்நடை மருத்துவர்களுக்கு 15 நாள் சிறப்பு பயிற்சி தரப்பட்டுள்ளது. இதுவரை 4.77 லட்சம் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப் பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%