கரூர் கூட்ட நெரிசல் பலி விசாரணைக்கு ஆஜராக 100 பேருக்கு சிபிஐ சம்மன்

கரூர் கூட்ட நெரிசல் பலி விசாரணைக்கு ஆஜராக 100 பேருக்கு சிபிஐ சம்மன்



கரூர்: கரூர் நெரி சல் பலி தொடர்பான விசாரணைக்கு ஆஜ ராகுமாறு 100க்கும் மேற்பட்டோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த செப்.27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச் சாரத்தின்போது ஏற் பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி ரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஐபிஎஸ் அதி காரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்துக்கு சென்ற சிபிஐ அதிகாரி கள் அங்கு 3டி லேசர் ஸ்கேனர் கருவியை கொண்டு சாலையை அளவீடு செய்தனர். விஜய் பிரச்சார வாக னம் வந்த சாலை, அவர் நின்று பேசிய இடத்தின் நீளம், அகலம் ஆகி யவை கருவி மூலம் அள வீடு செய்யப்பட்டது. சனிக்கிழமை மட்டும் சுமார் 9 மணி நேரம் அங்கு ஆய்வு நடந்தது. இந்நிலையில் வேலுச்சாமிபுரத்தில் உள்ள மளிகைக் கடை கள், பெட்ரோல் பங்கில் வேலை பார்ப்ப வர்கள் மற்றும் கடைக் காரர்கள், பொதுமக்கள் என 100-க்கும் மேற் பட்டோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அதில் நவ.2, 3 தேதிகளில் விசார ணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஞாயிறன்று பலர் பய ணியர் மாளிகையில் ஆஜராகினர். அவர் களிடம் சிபிஐ அதிகாரி கள் தீவிர விசாரணை நடத்தினர். 54 லட்சம் சாக்குகள் வருகை தஞ்சாவூர்: தஞ்சா வூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங் களில் குறுவை அறு வடை தீவிரமாக நடை பெற்று வருகிறது. 90 சதவீத அறுவடை எட்டி யுள்ள நிலையில், கொள்முதலுக்கு தே வையான சாக்குகள் கொல்கத்தாவில் இருந்து தஞ்சாவூர் மற்றும் கும்ப கோணம் ரயில் நிலை யத்திற்கு ஞாயிறன்று 54 லட்சம் சாக்குகள் மூட்டைகளாக கொண்டு வரப்பட்டன.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%