சென்னை, நவ. 2 – சமீபத்தில் கோவை வந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ண னிடம், பெங்களூரு-எர்ணாகுளம் இடையே யான வந்தே பாரத் ரயில் சேவை ஜவுளி நகரங்களான கோவை, திருப்பூர், ஈரோடு. சேலம் ஆகிய பகுதிகளில் நின்று செல்ல வேண்டும் என்று தொழில் அதிபர்கள், பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து, அவர், இது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் நேரில் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் தற்போது ரயில்வே அமைச்சகம் வெளி யிட்டுள்ள அறிவிப்பில், பெங்களூரு-எர்ணாகுளம் இடையேயான வந்தே பாரத் ரயில் கோவை உள்பட ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய இடங்களில் நின்று செல்வது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?