
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுதந்திர தினம், ஆடிக்கிருத் திகை, கிருஷ்ணஜெயந்தி மற்றும் வார விடுமுறை நாள் என தொடர் விடுமுறை காரணமாக பக்தர்களின் வருகை அதி கரித்துள்ளது. இதனால் திருமலை முழு வதும் பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. கிருஷ்ணஜெயந்தி மற்றும் ஆடிக்கிருத்திகை நாளான சனிக்கிழமை அன்று ஒரே நாளில் 87,759 பக்தர்கள் தரி சனம் செய்தனர். 42,043 பக்தர்கள் தலை முடி காணிக்கை செலுத்தினர். கோவில் உண்டியலில் ரூ.4.16 கோடி காணிக்கை செலுத்தினர். ஞாயிறன்று நிலவரப்படி காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள சிலா தோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். திருமலையில் பக்தர்கள் கூட் டம் அதிகளவில் உள்ளதால் போதிய அறைகள் கிடைக்காமல் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நிழற்பந்தல்கள் மற்றும் மாட வீதிகள், மடங்களில் தங்கி உள்ளனர். கூட்ட நெரிசல் அபாயம் ஏற் பட்டதாக செய்திகள் வெளியாகின.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?