ஜோதி மல்ஹோத்ராவுக்கு எதிராக 2,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை
Aug 19 2025
125
ஹரியானாவில் “டிராவல் வித் ஜோ” என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் பாகிஸ்தானுக்கு உளவுத் தகவல்கள் அளித்ததாக பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் மே 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஹரியானா மாநிலம் ஹிசார் காவல்துறையின் சிறப்பு புல னாய்வுக் குழு, ஜோதி மல்ஹோத்ரா வுக்கு எதிராக ஹிசார் நீதிமன்றத்தில் 2,500 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு அவர் உளவு பார்த்த தற்கான வலுவான ஆதாரங்கள் தங்களி டம் இருப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. மேலும், ஜோதியின் கைப்பேசியில் மேற்கொள்ளப்பட்ட எண்ணியல் தடயவியல் ஆய்வில், அவர் பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஷு டன் நீண்ட உரையாடல்களை நடத்தி யிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு துறை வட்டாரங்கள் தெரி விக்கின்றன. புவனேஸ்வரம்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?