அவன் வீட்டிலே ஒரு நூலகம் அமைத்தான்
நூற்றுக்கணக்கில் புத்தகங்களை வாங்கி
அதில் அடுக்கி வைத்தான்
அவன் அதில் ஒரு புத்தகத்தையும்
படித்ததில்லை
அவன் மனைவி மக்களையும்
அதில் படிக்கவிட்டதில்லை
யாருக்கும் இரவல் கொடுத்ததுமில்லை
வைக்கோல்போர் நாயாக
புத்தகத்தை காவல் காத்துக்கொண்டு
வீட்டுகொரு நூலகம் அமைப்போம் என்று
அவ்வப்போது முழங்கிக்கொண்டிருந்தான்!

-சின்னஞ்சிறுகோபு,
சென்னை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%