சிற்பக்கலை

சிற்பக்கலை



சிற்பக் கலையே சீர்மை

சீர்த்த முறையிலே பார்வை

பொற்புக் கலையிலே பொலிவு

போற்றும் முறையிலே அழகு!


கையின் வண்ணமே கவிதை

காட்சி யாவுமே எழிலே

மெய்யாய் விளங்குமே யாவும்

மேன்மை தவழ்ந்திடக் காணும்!


மாமல்ல புரத்திலே காண்க

மன்னன் பல்லவன் தோற்றம்

சேமம் கண்டிடக் கட்டி

செழிப்பை நாட்டினான் சுட்டி!


பார்த்தால் பரவசம் தானே

படைத்தான் அதிசய மாக

சேர்த்தோம் நெஞ்சிலே தானே

செய்தொழில் என்றுமே தேனே!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%