தருமபுரி ஆட்சியரக கூடுதல் கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார்
Jul 09 2025
18

சென்னை, ஜூலை 7-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், திங்களன்று (ஜூலை 7) தலை மைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், தருமபுரி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார். வருவாய்த்துறை சார்பில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.36.62 கோடியில் கட்டப் பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டடம், ரூ.17.52 கோடியில் கட்டப்பட்டுள்ள 4 வட்டாட்சியர் அலு வலக கட்டிடங்கள், ரூ.65 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 2 வருவாய் ஆய்வா ளர் அலுவலகத்துடன் கூடிய குடியி ருப்புகள் என மொத்தம் ரூ.54.80 கோடி யில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முத லமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தலை மைச் செயலாளர் நா. முருகானந்தம், கூடுதல் ஆணையர் மு. சாய்குமார், கூடு தல் தலைமைச் செயலாளர் பெ. அமுதா, இயக்குநர் (சமூக பாது காப்புத் திட்டம்) க.வீ.முரளீதரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலி வாயிலாக தருமபுரி மாவட்டத்திலிருந்து அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம், மக்களவை உறுப்பினர் அ.மணி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வ ரன், முன்னாள் அமைச்சர் பழனி யப்பன், மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?