தரங்கம்பாடி வட்டத்தில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் வழங்கல்: மயிலாடுதுறை கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு

தரங்கம்பாடி வட்டத்தில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் வழங்கல்: மயிலாடுதுறை கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு



மயிலாடுதுறை, நவ.10–


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட தில்லையாடி, காளஹஸ்தீனாபுரம், செம்பனார்கோவில் ஆகிய கிராமங்களில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் வழங்கப்படுவதை, கலெக்டர் /மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் நேரில் ஆய்வு செய்தார்.


வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி 27.10.2025 ந்தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 04.11.2025 முதல் 04.12.2025 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஒன்றான வாக்காளர்கள் வீடுகளுக்கே சென்று வாக்குசாவடி நிலை அலுவலர்கள் முன்னதாக அச்சிடப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் 2 பிரதிகள் வழங்கப்பட்டு வருகிறது.


வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து வாக்காளர் கையயொப்பமிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். பெறப்பட்ட அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இப்பணிகளை மாவட்ட அளவில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், அந்தந்த வாக்குசாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


சந்தேகம், புகார்களுக்கு எண்கள்


அனைத்து கணக்கெடுப்பு படிவங்களும் திரும்ப பெறப்பட்டு உரிய முறையில் வரைவு வாக்காளர் பட்டியல் 09.12.2025 அன்று வெளியிடப்படும். இதில், கோரிக்கை, மறுப்புகள் பெறப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் 07.02.2026 அன்று வெளியிடப்படும். இப்பணியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்கள் இருப்பின், மாவட்ட அளவில் மற்றும் சட்டமன்ற அளவில் கீழ்காணும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்களை பொதுமக்கள்தொடர்புக்கொள்ளலாம்.


மாவட்ட அளவில் - தேர்தல் கட்டுப்பாட்டு அறை, கலெக்டர் அலுவலகம், மயிலாடுதுறை (1950 என்ற எண்ணையும்), 160.சீர்காழி (தனி) - வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், சீர்காழி (04364 -- 270222 என்ற எண்ணையும்), 161.மயிலாடுதுறை - வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், மயிலாடுதுறை. (04364 -- 222033 என்ற எண்ணையும்), 162.பூம்புகார் - உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், தரங்கம்பாடி. (04364 - 289439 என்ற எண்ணையும்) தொடர்பு கொள்ளலாம்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%