டிரம்ப் வரி விதிப்பு தாக்குதல்: இரா. முத்தரசன் கண்டனம்

டிரம்ப் வரி விதிப்பு தாக்குதல்: இரா. முத்தரசன் கண்டனம்

சென்னை:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது வரி விதிப்பு தாக்குதல் நடத்தி வருவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா. முத்தரசன் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற பிறகு, டிரம்ப் அமெரிக்காவில் இறக்குமதியாகும் வெளிநாட்டு பொருட்கள் மீதான வரி விகிதங்களை கற்பனை செய்ய முடியாத அளவில் உயர்த்தியுள்ளார். இந்தியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 25 சத விகிதம் கூடுதல் வரியும், அபராதமாக 25 சதவிகிதமும் என மொத்தம் 50 சதவிகித வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்பால் இந்தியா 4 ஆயிரத்து 820 கோடி டாலர் மதிப்புள்ள வணிக வாய்ப்பை இழக்கும் என மதிப் பிடப்பட்டுள்ளது. ஜவுளி, ஆபரணங்கள், இறால், தோல், காலணி, மின்சார சாதனங்கள் போன்ற தொழில்கள் கடு மையாக பாதிக்கும்” என எச்சரித்துள்ளார். திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம் உள்பட தமிழ் நாடு முழுவதும் இந்த வரிவிதிப்பால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு பொருத்தமான மாற்று திட்டங்களையும் வரிச் சலுகை களையும் உருவாக்க வேண்டும் என இரா. முத்தரசன் வலி யுறுத்தியுள்ளார். 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%