சோனியா தியாகத்தால் தெலுங்கானா மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: ரேவந்த் ரெட்டி பேச்சுக்கு பாஜ கண்டனம்
ஹைதராபாத்: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா செய்த தியாகம் காரணமாக, தெலுங்கானா மாநிலம் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளதற்கு பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தது.
இதில் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: தெலுங்கானாவில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றால், அதற்கு சோனியாவின் பங்கு முக்கியமானது. அவரின் தியாகம் ஒரு காரணம் ஆகும். டிசம்பர் மாதத்துக்கு சிறப்பு வாய்ந்த முக்கியத்துவம் உள்ளது. இந்த மாதத்தில் தான் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. சோனியாவின் பிறந்த நாளும் வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இது தொடர்பாக பாஜ செய்தித்தொடர்பாளர் ஆர்பி சிங் கூறியதாவது: சோனியா எப்போதும் ஹிந்து மதம் மீது நம்பிக்கை காட்டியது இல்லை. அவர் பிறந்த மதமான கிறிஸ்துவத்தையே பின்பற்றி வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ஜன்பத் சாலையில் உள்ள அவரது வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடக்கும். தீபாவளி கொண்டாடப்பட மாட்டாது. ஒவ்வொருவரும், தனது நம்பிக்கைக்கு ஏற்ப மதத்தை பின்பற்றுவது என்பது அவர்களின் விருப்பம். ஆனால், முதல்வரின் பேச்சு தவறானது. இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு பாஜ செய்தித் தொடர்பாளர் நவின் கோஹ்லி கூறியதாவது: நேரு சோனியா குடும்பத்தை ஒவ்வொரு காங்கிரஸ் நிர்வாகியும் போற்றுவது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு அவர்களை காரணம் என்ன? முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை ஓட்டு வங்கியாக காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் பார்ப்பதுஏன்? அவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட விரும்பினால், அது ஒரு அரசியல் நோக்கத்துக்காக இல்லாமல் அந்த பண்டிகையின் பொருட்டு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டி இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?