செல்லில் மூழ்காதே!

செல்லில் மூழ்காதே!



செல்லில் மூழ்கிப்  போகாதே 

செல்லா காசாய் ஆகாதே!

பள்ளிப்  படிப்பை மறந்தேதான்

பொழுதை போக்க நினைக்காதே!  


உள்ளே பலவித நிகழ்வுண்டு

உனக்குத் தேவை எதுவென்று 

நல்லோர் கருத்தை நாடிடுக 

நன்மை சேதியில் கூடிடுக!


எல்லா நேரமும் செல்போனில்

எதையோ பார்த்து அலைமோதி 

நல்லா இருக்கும் கண்,மனமும் 

நலிந்தே போய்விட விடலாமோ?


இல்லா கற்பனை பல கோடி 

இருப்பது போலே நினைத்தே தான் 

சொல்லா வகையில் போகாதே 

செல்லா காசாய் ஆகாதே!


பல்லோர் நேரம் பசிதாகம் 

வந்தால் தீர்ப்பது போல்நீயும் 

தேவைக்கு மட்டும் செல்பாரு

தவிர்த்தால் வருமே அவப்பேரு!



வெ.தமிழழகன் எம்ஏ.பிஎட் ,

சேலம்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%