சிநேகிதம்

சிநேகிதம்



ஹீட்டர் திடீரென பழுதானது

உத்திரவாத காலம் இருந்தது

பத்து நாட்கள் பக்கவாதம்


துவைக்கும் இயந்திரம் மக்கர்

கைவினைஞர் சீர் செய்தார்

இரண்டு நாட்கள் தொல்லை


 டிவி சண்டித்தனம் புரிந்தது

 கம்பெனி நிவர்த்தி செய்தது

 உதிரி கிடைக்க தாமதமாச்சு


 மிக்ஸி ஓட்டத்தை நிறுத்திற்று

 புதிது வாங்கித் தொலைத்தேன்

 பழையதை வாங்க மறுத்தனர்


 பிரிட்ஜ் குளிர்ச்சியாய் இல்லை

 வாயு நிரப்பியதும் இயங்கிற்று

 இரண்டாயிரம் ரூபாய் செலவு


 ஓராண்டில் இத்தனை சிக்கலா?

 மனிதனுக்கு எத்தனை நெருக்கடி?


 நிபுணரின் யோசனை நெத்தியடி

 ஒயரிங் புதிதாய் மாற்றணுமாம்!



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%