சென்னை அரசுப் பள்ளி மாணவர்களுக்கிடையே போதைப் பொருள் விழிப்புணர்வு கைப்பந்து போட்டி

சென்னை அரசுப் பள்ளி மாணவர்களுக்கிடையே போதைப் பொருள் விழிப்புணர்வு கைப்பந்து போட்டி


சென்னை, நவ. 5–


பூக்கடை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில் மாணவர்களுடன் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மற்றும் கைப்பந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி கோப்பைகள் பரிசளிக்கப்பட்டன.


சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் வழிகாட்டுதலின் பேரில், பூக்கடை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களால் தங்கள் எல்லைக்குள் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி மற்றும் கைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது.


இவ்விழிப்புணர்வு பேரணி போதைப்பொருட்களுக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகளுடன் மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்று மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (வடக்கு மண்டலம்), காவல் உதவி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கைப்பந்து போட்டியில் மாணவர்கள் பங்கேற்ற 6 அணிகளில், முதல் 4 இடங்களைப் பிடித்த பள்ளி மாணவ குழுக்களுக்கு கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.


போட்டி தொடங்குவதற்கு முன்புயானைகவுனி காவல் நிலையத்திலிருந்து பெரியமேடு, கண்ணப்பர் திடல் வரை போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியாக காவல்துறையினருடன் சுமார் 150 மாணவர்கள் நடந்து வந்தனர். மேலும் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%