குமாரபாளையம், நவ. 5–
தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில், 8வது மாநில அளவிலான 15 வயதிற்குட்பட்டோருக்கான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி குமாரபாளையத்தில் நடைபெற்றது.
மல்யுத்த போட்டி
தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின் பொதுச்செயலர் மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் லோகநாதன் அவர்கள் தலைமை வகித்தார். எஸ்.எஸ்.எம். கல்வி நிறுவனத் தலைவர் மதிவாணன் போட்டியைத் தொடங்கி வைத்தார்.
நாமக்கல், கரூர், ஈரோடு, கடலூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து 250க்கும் அதிகமான மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.
நடுவர்கள்: ரஞ்சிதா, வர்மா ஆகி யோர் நடுவர்களாகப் பங்கேற்றனர். மாநில அளவிலான இந்த மல்யுத்தப் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வெற்றி பெற்றனர். ஆடவர் பிரிவில், 52 கிலோ எடைப்பிரிவில் கடலூரைச் சேர்ந்த பிரித்திவிராஜ் தங்கப் பதக்கமும், நாமக்கல்லைச் சேர்ந்த மவுலீஸ்வரன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். மகளிர் பிரிவில், 66 கிலோ எடைப்பிரிவில் சேலத்தைச் சேர்ந்த ஹேசியா தங்கப் பதக்கமும், நாமக்கல்லைச் சேர்ந்த சவுந்தர்யா வெள்ளிப் பதக்கமும், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அனுஸ்ரீ வெண்கலப் பதக்கமும் வென்றனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் விருதை கடலூர் மாவட்ட மல்யுத்த சங்கம் பெற்றது.
சாம்பியன்ஷிப் விருது
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் விருதை கடலூர் மாவட்ட மல்யுத்த சங்கத்தின் பொதுச் செயலர் கோடீஸ்வரன் பெற்றார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு எஸ்.எஸ்.எம். கல்வி நிறுவனத் தலைவர் மதிவாணன் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?