சென்னையில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்: மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

சென்னையில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்: மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

சென்னை:

சென்​னை​யில் தெரு​நாய்​கள் தொல்​லையை கட்​டுப்​படுத்த வேண்​டும் என்று மாநக​ராட்சி மன்ற கூட்​டத்​தில் கவுன்சிலர்​கள் புகார் தெரி​வித்​துள்​ளனர். சென்னை மாநக​ராட்சி மாமன்​றக் கூட்​டம் மேயர் ஆர்​.பிரியா தலை​மை​யில், துணை மேயர் மு.மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்​னிலை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற திமுக கவுன்​சிலர்​கள் `ஓரணி​யில் தமிழ்​நாடு' என்ற பேட்ஜ் அணிந்து வந்​திருந்​தனர்.


கூட்​டத்​தில் பேசிய கவுன்​சிலர்​கள் பலர், ``சென்னை மாநக​ராட்​சி​யில் உள்ள சாலைகளில் தெரு​நாய்​களின் தொல்லை அதி​கரித்து வரு​கிறது. ரிப்​பன் மாளிகை வளாகத்​திலேயே ஏராள​மான நாய்​கள் உள்​ளன. இவை பொது​மக்​களுக்கு பெரிய அச்​சுறுத்​தலாக உள்​ளன.


அவற்​றைக் கட்​டுப்​படுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும்'' என்று தெரி​வித்​தனர். இதற்கு பதில் அளித்த மேயர், ``சென்னை சாலைகளில் சுற்​றும் தெரு நாய்​களை பிடித்​து, இனக்​கட்​டுப்​பாடு செய்து வரு​கிறோம். ஒரு நாளில் 85 நாய்​களுக்​கு​தான் இனக்​கட்​டுப்​பாடு செய்ய முடி​யும்.


அவற்​றுக்கு வெறி நோய் தடுப்​பூசி​யும் போடப்​படு​கிறது. இனக்​கட்​டுப்​பாடு செய்த பிறகு, அவற்​றுக்கு மைக்ரோ சிப் பொருத்தி கண்​காணிக்க நடவடிக்கை எடுத்து வரு​கிறோம்'' என்​றார். தொடர்ந்து பேசிய கவுன்​சிலர்​கள், ``தெரு நாய்​களைப் பிடித்து இனக்​கட்​டுப்​பாடு செய்​வது மட்​டும் தீர்​வா​காது'' என்​றனர்.


பின்​னர் இக்​கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​கள்: மாநக​ராட்சி கவுன்​சிலர்​கள் 200 பேர் ரூ.4 லட்​சம் செல​வில் முழு உடல் பரிசோதனை செய்​து​கொள்ள மாநக​ராட்சி மேயர் ஆர்​.பிரியா நிர்​வாக அனு​மதி அளித்​ததற்கு மாமன்​றக் கூட்​டத்​தில் ஒப்​புதல் அளித்து தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%