கொடிக்கம்பம் வழக்கில் தவெக இடையீட்டு மனு தாக்கல்

கொடிக்கம்பம் வழக்கில் தவெக இடையீட்டு மனு தாக்கல்

மதுரை:

தமிழகத்​தில் பொது இடங்​களில் உள்ள கொடிக்​கம்​பங்​களை அகற்​றும் உத்​தர​வுக்கு எதி​ரான வழக்​கில், தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் இடை​யீட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.


தமிழகத்​தில் தேசிய, மாநில நெடுஞ்​சாலைகள், உள்​ளாட்சி இடங்கள் என பொது இடங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகள், சாதி, மத அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்​று​மாறு நீதிபதி இளந்​திரையன் ஜன.27-ல் உத்​தர​விட்டார். இந்த உத்​தரவை ரத்து செய்யக்கோரி தாக்​கல் செய்​யப்​பட்டமேல்​முறை​யீட்டு மனுவை நீதிபதி நிஷா​பானு அமர்வு தள்​ளு​படி செய்​தது.


இந்​நிலை​யில், கொடிக்​கம்​பங்​களை அகற்​றும் உத்​தரவை ரத்து செய்​யக் கோரி​யும், இந்த உத்​தர​வில் இருந்து கம்​யூனிஸ்ட் கட்சிக்கு விலக்கு அளிக்​கக் கோரி​யும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் சண்​முகம் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனுவை நீதிப​திகள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் அமர்வு விசா​ரித்​து, வழக்கை 3 நீதிப​திகள் கொண்ட அமர்​வுக்கு மாற்​றியது.


இந்த மனு நீதிப​தி​கள் சுப்​பிரமணி​யம், சவுந்​தர், விஜயகு​மார் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தபோது, “இந்த வழக்​கில் இணைய விரும்​பும் கட்சிகள், அமைப்பு​கள் ஆக. 5-க்​குள் இடையீட்டு மனு தாக்​கல் செய்ய வேண்​டும். அது​வரை கொடிக்​கம்​பங்​களை அகற்றும் விவ​காரத்​தில் தற்​போதைய நிலையே நீடிக்க வேண்​டும்” என உத்​தர​விடப்​பட்​டது.


இதையடுத்​து, தமிழக வெற்​றிக்கழகம் சார்​பில், அதன் பொதுச் செய​லா​ளர் என்​.ஆனந்த், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் இடையீட்டு மனுதாக்​கல் செய்​துள்​ளார். அதில், “அரசி​யல் கட்​சிகள் தங்​களின் கொள்​கைகளை பரப்​புவதற்​காக சட்​டப்​பூர்​வ​மாக கொடிக்​கம்​பங்​களை நிறுவி வரு​கின்​றனர். ஆனால், நீதி​மன்ற தடை உத்​தர​வி​னால் அனைத்து அரசி​யல் கட்​சிகளும் பாதிக்கப்படும் நிலை உள்​ளது. குறிப்​பாக, எங்​கள் கட்சி கடுமை​யான பாதிப்பை சந்​திக்​கிறது.


எனவே, கொடிக்​கம்​பங்​களை அகற்​றும் உத்​தர​வுக்கு எதி​ரான மேல்​முறை​யீட்டு வழக்​கில் எங்​கள் கட்​சி​யை​யும் ஒரு தரப்​பாக சேர்த்​து, இது தொடர்​பாக எங்​கள் தரப்​பில் இருந்து சட்​டப்​பூர்வ கருத்​துகளை​யும் தெரிவிக்க வாய்ப்பு வழங்க வேண்​டும்’’ என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%