மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் 3-வது இடம்: உதயநிதி பெருமிதம்

மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் 3-வது இடம்: உதயநிதி பெருமிதம்

சென்னையில் நேற்று நடைபெற்ற முதலாவது அறிவுசார் சொத்துரிமை மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் 6 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், செயலர் பிரஜேந்திர நவ்னித், எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன், ஐடிஎன்டி தலைமை நிர்வாக அதிகாரி வனிதா வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். | படம்: ம.பிரபு |

சென்னை: சென்​னை​யில் நடந்த முதலா​வது அறி​வு​சார் சொத்​துரிமை மாநாட்டை தொடங்கி வைத்த துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், இந்​தி​யா​வில் 3-வது பெரிய மென்​பொருள் ஏற்​றும​தி​யாள​ராக தமிழகம் திகழ்​வ​தாக தெரி​வித்​தார். இந்த மாநாட்​டில் 6 முன்​னணி நிறு​வனங்​களு​டன் ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது.


தமிழக அரசின் தகவல் தொழில்​நுட்​பத் துறை​யின்​கீழ் செயல்​பட்டு வரும் தமிழ்​நாடு தொழில்​நுட்ப மையம் (ஐடிஎன்​டி) சார்​பில் முதலா​வது அறி​வு​சார் சொத்​துரிமை மாநாடு சென்னை கோட்​டூர்​புரத்​தில் நேற்று நடை​பெற்​றது.


‘அறி​வு​சார் மையம் மூலம் தமிழகத்தை இந்​தி​யா​வின் புது​மை​யின் தலைநகர​மாக மாற்​று​தல்’ என்ற தலைப்​பில் நடந்த மாநாட்டை துணை முதல்​வர் உதயநிதி தொடங்கி வைத்து தொழில்​நுட்ப கண்​காட்​சியை பார்​வை​யிட்​டார். தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் முன்​னிலை வகித்​தார்.


இந்த மாநாட்​டில் டீப்​-டெக் தொழில்​நுட்​பம், ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​கள் மற்​றும் ஆராய்ச்​சி​யாளர்​களுக்கு ஆதரவு அளிக்​கும் வகையில் தேசிய ஆராய்ச்சி மேம்​பாட்டு நிறு​வனம், மகேந்​தி​ரா, போஷ் உள்​ளிட்ட 6 முன்​னணி நிறு​வனங்​களு​டன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.


அதைத்​தொடர்ந்து தமிழ்​நாடு தொழில்​நுட்ப பரி​மாற்ற வசதி மையம் மூலம் ஆராய்ச்​சி​யாளர்​களுக்கு உதவும் வகை​யில் 4 முன்னணி சட்ட நிறு​வனங்​களிடம் சட்​டப்​பூர்வ பங்​கு​தா​ரர்​களின் விருப்​பக் கடிதங்​களும் பரி​மாற்​றம் செய்​யப்​பட்​டன.


இதையடுத்து செயற்கை நுண்​ணறிவு (ஏஐ), ரோபோட்​டிக்​ஸ், தொழில்​நுட்ப மருத்​து​வம், விண்​வெளி தொழில்​நுட்​பம், சைபர் பாதுகாப்​பு, குவாண்​டம் தொழில்​நுட்​பம் போன்ற வளர்ந்து வரும் தொழில்​நுட்​பத்​தில் உள்​வளர்ச்சி பெற்ற 5 ஸ்டார்ட்​அப் நிறு​வனங்களுக்கு ஐடிஎன்டி மையத்​தின் ஃபவுண்​டேஷன் நிதி​யின் கீழ் காசோலைகளை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வழங்கினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%