ஆசை தடைப்பட்ட இடம் தான் கோபம்!
உறவுகளின் நெருஞ்சி முள்தான் கோபம்!
பொறுமை என்ற நகைஅணிந்து பெருமை கொள்!
கோபம் மனிதர்களுக்கு ஏற்படும் கடும் உணர்ச்சி!
இரத்த அழுத்தம் இதயத்துடிப்பை அதிகரிக்கும்!
இது உடலில் விஷம் போல் பரவும்!
இதை கட்டுபடுத்த குளிர் நீரில் குளிப்பது நல்லது!
இது எரிச்சலான மனநிலையை உருவாக்கும்!
கோபம் உறவருக்கும் பகை செய்யும் பலி செய்யும்!
வாழ்கையை தடைக்கல்லாக மாற்றும்!
மன அழுத்தம் வரும் நிம்மதி குறையும்!
குடும்பத்தில் நன்மையை இழப்பாய்!
கோபம் அத்தி பூத்தார் போல் இருக்க வேண்டும்!
நெருஞ்சிபூ பூப்பதை பற்றி கவலை படுவது இல்லை!
குறிஞ்சி பூ பூப்பது போல் கோபப்படவேண்டும்!
கோபம் அபூர்வமாக வரவேண்டும்!
முடிந்த வரை கோபத்தை தடுப்பது நல்லது!
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

பெ.திருமுகம்
மணமேல்குடி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?