குன்றத்தூர் நாகேச்சுவர சுவாமி கோவிலில் ரூ.68 லட்சம் செலவில் அன்னதானக் கூடம்: அமைச்சர்கள் அன்பரசன், சேகர்பாபு திறந்தனர்
சென்னை, நவ.7–
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் காமாட்சியம்மன் உடனுறை நாகேச்சுவர சுவாமி கோயிலில் ரூ.68 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அன்னதானக் கூடம் மற்றும் ரூ.16.65 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நிர்வாக அலுவலகம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் காமாட்சியம்மன் உடனுறை நாகேச்சுவர சுவாமி கோயிலானது 850 ஆண்டு பழமையான கோயிலாகும். இக்கோயிலானது சென்னையை சுற்றியுள்ள நவகிரகத் தலங்களில் ராகு தலமாகவும், சேக்கிழார் பெருமானுக்கு தனி சன்னதி கொண்ட தலமாகவும் திகழ்கிறது. இக்கோயிலுக்கு ரூ.62.30 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2022–ம் ஆண்டு டிசம்பர் மாதம் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
இக்கோயிலில் செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்திற்காக ரூ.68 லட்சம் செலவில் புதிய அன்னதானக் கூடமும், ரூ.16.65 லட்சம் செலவில் நிர்வாக அலுவலகமும் கட்டப்பட்டு இன்றைய தினம் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப் பெருந்தகை, மண்டல இணை ஆணையர் சி.குமரதுரை, துணை ஆணையர்கள் மா.ஜெயா, கே. சித்ராதேவி, நகர் மன்ற தலைவர் கோ.சத்தியமூர்த்தி, கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் டி.எம்.சிவசண்முகம் மற்றும் உறுப்பினர்கள், உதவி ஆணையர் ஆர்.கார்த்திகேயன், செயல் அலுவலர் பா.சுதாகர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிதிகள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?