காரைக்கால்அம்மையார் மாங்கனித்திருவிழா இன்று துவக்கம் ஏற்பாடுகள் பற்ற ஆலோசனை
Jul 07 2025
35

காரைக்கால், ஜூலை 8
காரைக்காலில் ஆண்டுதோறும் நடைபெறும் காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா இன்று மாப்பிள்ளை அழைப்பு வைபத்துடன் தொடங்குகிறது. நாளை காலை பரமதத்தர்- புனிதவதியார் திருக்கல்யாணம், அன்று மாலை பிச்சாண்டவர் வெள்ளைசாற்றி புறப்பாடு, 10-ம் தேதி அதிகாலை பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், அன்று காலை பிச்சாண்டவர் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா (மாங்கனிகளை வாரி இறைத்து வழிபடுதல்), மாலை அமுது படையல், 11-ம் தேதி அம்மையார் இறைவனுக்கு காட்சிக் கொடுக்கும் நிகழ்வு ஆகியவை நடைபெற உள்ளன. ஆக.8-ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறும்.
விழாவையொட்டி மாவட்ட நிர்வாகம், காவல் துறை சார்பில் பக்தர்களுக்கு தேவையான சுகாதார வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன் தலைமையில் நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?