நமது அடையாளத்தை அறிய தாய்மொழியில் கற்கவேண்டும் அமைச்சர் அன்பில்மகேஷ் வலியுறுத்தல்
Jul 07 2025
99

சென்னை, ஜூலை 8-
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார்.அமைச்சர் பேசியதாவது-
அரசுப் பள்ளி மற்றும் அரசு ஆசிரியர்கள் மட்டும் அல்ல, தனியார் ஆசிரியர்களும் எங்கள் ஆசிரியர்கள் தான். கடந்த ஆண்டும் இது போன்று பயிற்சிகள் வழங்கப்பட்டது. நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இந்த புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நம்மை நாம் அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
இன்று நம்மை காட்டிலும் AI யிடம் குழந்தைகள் நிறைய விஷயத்தை தெரிந்து கொள்கிறார்கள். ஆனால் பள்ளியில் நின்று ஆசிரியர் நடத்துவது போல வராது. தமிழ் மொழி இல்லை என்றால் நாம் நம்மை மறந்துவிடுவோம். நமது கலாச்சாரம், பண்பாடு எல்லாம் மொழியை அடிப்படையாக கொண்டது. கீழடி அகழ்வாராய்ச்சியே அதற்கு சான்று. 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் இரும்பை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற பெருமையை நாம் பார்த்து இருக்கிறோம்.
மும்மொழி எதற்கு?
தமிழ் நமது அடையாளம், ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு. வாய்ப்பு உள்ளது என்றால் நாம் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை 8ல் உள்ள 22 மொழிகளையும் கற்கலாம் அதில், எந்த தவறும் இல்லை. நமது மொழியை உயர்த்தி பிடிப்பதற்கு உரிய பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது.
அரசுப் பள்ளிகளில் தமிழ் கற்பிப்பது போல தனியார் பள்ளிகளில் தமிழ் கற்பிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. நமது மாணவர்கள் நாம் யார்? என்று தெரிந்து கொள்வதற்கு நமது தாய் மொழியை கற்க வேண்டும், நமது அடையாளத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?