காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண சிரவண தீபம் ஏற்றி வழிபாடு!
Jul 12 2025
80

வேலூர், ஜூலை 13-
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஶ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு 12ம் தேதி சிரவண தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. அர்த்த மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மஹாலஷ்மிக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிரவண தீபத்தை ஏற்றி பின்பக்கமாக இடமிருந்து வலமாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மஹாலட்சுமி விக்கிரகத்தை மூன்று முறை வலம் வந்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு கேசரி, பஞ்சாமிர்தம், சுண்டல், சாம்பார் சாதம் ஆகிய பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. குங்குமம், சந்தனம், மஞ்சள், செந்தூரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஶ்ரீபக்த ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ கண்ணன் பட்டாச்சாரியார் வெகுவிமரிசையாக செய்திருந்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?