கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஜப்பான் ஷிட்டோரியூ கராத்தே டோ இந்தியா அமைப்பு சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஜப்பான் ஷிட்டோரியூ கராத்தே டோ இந்தியா அமைப்பு சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஜப்பான் ஷிட்டோரியூ கராத்தே டோ இந்தியா அமைப்பு சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டிகள் நேற்று சிறப்பாக நடைபெற்றன. அகில இந்திய தலைவர் ரமேஷ் தலைமையில் போட்டிகள் துவக்கப்பட்டன. மாவட்ட தலைவர் கராத்தே செங்குட்டுவன் வரவேற்றார்.


முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயசங்கர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் டேனியல்ராஜ், இன்ஸ்பெக்டர் ஷாகுல் அமீது, ஸ்ரீ சாரதா ஆசிரமம் யத்திஸ்வரி ஆத்ம விகாசப்ரியா அம்பா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.


வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு திரைப்பட நடிகர் ரியாஸ் கான் மற்றும் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணன் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.


இந்நிகழ்ச்சியில் அறங்காவல் குழு தலைவர் செல்லையா, மூத்த வழக்கறிஞர் ராவணன், நகர மன்ற உறுப்பினர்கள் மாலதி இராமலிங்கம், கனகவள்ளி தேசிங்கு, செல்வகுமாரி ரமேஷ்பாபு, மனோபாலன், சிவசங்கரி சந்திரகுமார், மருத்துவர் ரிஸ்வான் மற்றும் மாநில அளவிலான கராத்தே பிளாக் பெல்ட் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.


காலை முதல் மாலை வரை நீடித்த இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெற்றோர் பார்வையிட்டு சிறப்பித்தனர்.


பட விளக்கம்:

கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் வழங்கும் நடிகர் ரியாஸ் கான்; அருகில் அகில இந்திய தலைவர் ரமேஷ்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News