கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி

கண்ணொளி காப்போம்  திட்டத்தின் கீழ்  ஆசிரியர்களுக்கு பயிற்சி

பாபநாசம், ஜுலை 7-

சுகாதார அதிகாரி டாக்டர் கலைவாணி உத்தரவின் பேரில், கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சியில் கபிஸ்தலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ அறிவியல் நிபுணர் ரெங்கநாயகி பயிற்சியளித்தார். வட்டார மருத்துவ அலுவலர் தீபக் முன்னிலை வகித்தார். பாபநாசம் வட்டாரத்தைச் சேர்ந்த நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 35 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில், கண் மருத்துவ அறிவியல் நிபுணர் ரெங்கநாயகி, பள்ளி மாணவ- மாணவிகளுக்கு. ஆசிரியர்கள் எப்படி கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்று பயிற்சியளித்தார். இதேபோல், திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சியில் கண் மருத்துவ அறிவியல் நிபுணர் ரெங்கராஜ் 26 ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தார். இதில் டாக்டர் பிரதீப்ராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அண்ணாமலை, பள்ளி தலைமை ஆசிரியை தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%