ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வு பெறும் தினத்தன்றே ஓய்வு ஊதிய வழங்கல் ஆணை: "ப்ரயாஸ்" திட்டம் மூலம் ஏற்பாடு

ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வு பெறும் தினத்தன்றே ஓய்வு ஊதிய வழங்கல் ஆணை: "ப்ரயாஸ்" திட்டம் மூலம் ஏற்பாடு



சென்னை, நவ.5–


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் "ப்ரயாஸ்" எனும் திட்டம் வாயிலாக ஓய்வூதியதார்களுக்கு ஊதியர் ஓய்வு பெறும் தினத்தன்றே ஓய்வு ஊதிய வழங்கல் ஆணைகளை பெறும் வகையில் செயல்படுத்தி ஓய்வூதியம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.


இந்தத் திட்டத்தின்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சென்னை மண்டலம், கடந்த அக்டோபர் மாதம் பணி மூப்பு காரணமாக ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய வழங்கல் ஆணைகளை வழங்கியது.


இந்த நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டை மண்டல அலுவலக வளாகத்தில் நீரஜ் சிங், (ஓய்வூதியம்), டி. கோவிந்தராஜன் (உதவி ஆணையர்), பிபின்குமார் (உதவி ஆணையர்), ஏ.பிரகாஷ் (கணக்கு அலுவலர்), கே.ஆனந்தி (பிரிவு மேற்பார்வையாளர்) மற்றும் முதன்மை அதிகாரி சு.செந்தில்வேல் ஆகியோர் முன்னிலையில் தேபி பிரசாத் பட்டாச்சார்யா (மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர்), ஊழியர்களுக்கு ஆணையை வழங்கினார்கள்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%