உடுமலை செங்குளத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் திட்டம் தொடக்கம்

உடுமலை செங்குளத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் திட்டம் தொடக்கம்


உடுமலை, நவ. 5–-


உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல், குளங்கள், ஏரிகள், நீர் நிலைகள் மற்றும் மலைப்பகுதிகளில் பசுமை வளர்ச்சியை நோக்கமாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் எண்ணத்துடனும் செயல்படும் “மழை உடுமலை” அமைப்பின் சார்பாக “ஒரு லட்சம் பனை விதைகள்” விதைக்கும் திட்டத்தின் துவக்க நிகழ்வு உடுமலை செங்குளத்தில் (உடுமலை திருப்பதி கோயிலுக்கு அருகில்) தொடங்கப்பட்டது.


இந்நிகழ்வினை வடபூதநத்தம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் வெங்கட்ரமணி தலைமையில், திருப்பூர் மாவட்ட வன அலுவலரும், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநருமான ராஜேஷ் போஜ், உடுமலைப்பேட்டை திருமூர்த்திக்கோட்டம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் பிரபாகரன், ஜல்லிப்பட்டி ஊராட்சி செயலாளர் ஆகியோர் பனை விதைகளை விதைத்து திட்டத்தைத் துவக்கி வைத்தனர்.


பனை மரங்களை காக்கும் நோக்கில் "மழை உடுமலை" அமைப்பு இத்திட்டத்தை முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது.


இந்த திட்டத்தின் துவக்கமாக 2,000 பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. மேலும், இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் உடுமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏரிகள், குளங்கள், ஓடைகள் போன்ற நீர்நிலைகளில் பனை விதைகள் விதைக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெறும் என, 'மழை உடுமலை' ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


மேலும் "மழை உடுமலை" பசுமை பணிகளில் ஒரு திட்டமான "வாரா வாரம் ஆரவாரம்" என்ற நிகழ்வின் மூலம் ஒவ்வொரு வாரமும் நீர் வசதியும், பாதுகாப்பும் உள்ள இடங்களில், காலியிடங்கள் மற்றும் கோழி பண்ணைகளில் இலவசமாக மரக்கன்றுகள் நடவும் செய்து வருகிறோம் என்றனர்.


மரக்கன்று வேண்டுவோர்...


மரக்கன்றுகள் நடவு செய்ய தேவைப்படுபவர்கள் 9865077103, 9865924424, 9578177929, 9994342154 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றனர்.


இந்நிகழ்ச்சியில் உள்ளூர் அரிமா சங்கம், அபெக்ஸ் சங்கம், ரோட்டரி சங்கம், வியாபாரிகள் சங்கம், உடுமலை இன்னர் வீல் கிளப், வாசவி சங்கம், ஹீலிங் ஹாண்ட்ஸ் அறக்கட்டளை போன்ற தன்னார்வ அமைப்புகளின் நிர்வாகிகள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், உடுமலை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பிரீமியர் மில்ஸ் பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ–மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நூறு நாள் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு உற்சாகமாக பனை விதைகளை விதைத்தனர்.


நிகழ்ச்சியின் முடிவில் ஏழுகுள பாசன சங்க உறுப்பினர் செல்வராஜ் நன்றி கூறினார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%