இருதரப்பு உறவுகளை மேம்படுத்த சிறந்த பங்களிப்புக்கான விருது: ஜப்பான் தூதரகத்தில் 33 ஆண்டு பணியாற்றிய லோகநாதன் தேர்வு
Nov 07 2025
10
சென்னை, நவ. 5-
ஜப்பான் மற்றும் பிற நாடுகள் இடையே இருதரப்பு உறவை மேம்படுத்த சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கான விருதுக்கு, ஜப்பான் தூதரகத்தில் 33 ஆண்டுகள் பணியாற்றிய ஏ.பி.லோகநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பான் அரசாங்கம், 2025 ஆம் ஆண்டு வெளிநாட்டு நிபுணர்களுக்கு வழங்கப்படும் மரியாதை விருதுகளை அறிவித்துள்ளது. ஜப்பான் மற்றும் பிற நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த சிறப்பு விருதை பெறுபவர்களில் ஒருவராக சென்னை ஜப்பான் தூதரகத்தில் பணியாற்றிய ஏ.பி. லோகநாதன் தேர்வாகியுள்ளார்.
லோகநாதனுக்கு ஜப்பான் அரசின் மிக உயரிய "Order of the Sacred Treasure", "Gold and Silver Rays" என்ற விருது வழங்கப்படுகிறது. 1992 முதல் 2025 வரை, கல்ச்சுரல் செக்சனில் ‘சீனியர் அட்வைசராக’ அர்ப்பணிப்புடன் தொடர்ந்து 33 ஆண்டுகள் அவர் ஜப்பான் தூதரகத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி, குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பையும் திறமையையும் வெளிப்படுத்தினார்.
தூதரகத்தின் தினசரி பணிகளில் அவர் செய்த பணி, ஜப்பான்-இந்தியா நட்புறவை வலுப்படுத்தியதுடன், கலாச்சார மற்றும் சமூக இணைப்புகளுக்கும் முக்கிய பங்களிப்பாக அமைந்தது. இதற்காக அவருக்கு வழங்கப்பட்ட இந்த விருது, அவரது சேவையை ஜப்பான் அரசு மிக உயர்வாக மதிப்பிடுவதைத் தெளிவாக காட்டுகிறது.
சென்னை ஜப்பான் தூதரகம், லோகநாதனை வாழ்த்தி, அவரது நீண்டகால சேவைக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளது. விருதுக்கான சான்றிதழும் நினைவுச் சின்னமும் தூதரகம் வழியாக பின்னர் அவரிடம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?