
53 ஆண்டுகால பழமையான ஐரோப்பிய சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின், நடப்பாண்டுக்கான சீசனின் இறுதி ஆட்டம் இத்தாலி நாட்டின் உடின் நகரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் கிளப் அணியான பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணியும் - இங்கிலாந்து கிளப் அணியான டோட்டன்ஹாம் அணியும் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 90ஆவது நிமிடம் வரை இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தன. கூடுதல் நிமிடத்திலும் இரு அணிகளும் மேற்கொண்டு கோலடிக்காத நிலையில், பெனால்டி சூட் அவுட் கடை பிடிக்கப்பட்டது. பெனால்டி சூட் அவுட் முடிவில் 4-3 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அணி வெற்றி பெற்று, முதன் முறையாக ஐரோப்பிய சூப்பர் கோப்பையை கைப்பற்றியது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?