கிரஸண்ட் ரியல் எஸ்டேட் அலுவலகம் இருந்த இரண்டாவது மாடியிலிருந்து அந்த கிராமத்தான் இறங்கிக் கொண் டிருந்தான். வந்த வேலை முடியாது போய் அதனால் ஏற்பட்ட ஏமாற்றம் ஏற்பட்டு அவன் முகம் சுருங்கிப்
போய் ஒரு வித சோகமும் முகத்தில் இழைந்தோடியது ! நடையிலும் தடுமாற்றம் !
பழுப்புநிறத்தில் வேஷ்டியும் , பச்சை நிறத்தில் துண்டும் தோளைச்சுற்றி அணிந்திருந்தான். வலது கை இடுக் கில் நிறம் மங்கிப் போன தூணிப் பை வைத்திருந்தான். கால்களில் நைந்து
போன செருப்பு. கடைசிபடிக்கட்டில் கால்வைத்து தரையில் இறங்கிய வனை எதிரில் வந்த அந்தப் பெண் மணி பார்த்தார். பார்க்கப் பாவமா யிருந்தது.
" என்னப்பா ! நிலம் வாங்க வந்தியா ?"
கிராமத்தானைப் பார்த்து கேட்க , அதற்கு அவன், " ஆமாங்க !" என்றான்.
" வாங்கிட்டியா ?"
" இல்லீங்க !"
" ஏன் ?"
"பின்ன என்னங்க ! கோடி, லட்சத்துல
சொல்றாங்க. அப்படி நா வாங்கணு ம்னா கிராமத்துல இருக்குற நெலம் எல்லாத்தையும் நா வித்துப்புட வேண் டியதுதான். நமக்கு கட்டுப்படி ஆகா
துங்க ! "
" அப்படியா...அப்போ உன் பட்ஜட் என்ன?"
" அப்படின்னா ?"
" உன்னால எவ்வளவு பணம் கொடு
த்து வாங்க முடியும் ?"
தலையை சொறிந்தபடி சில வினாடி கள் யோசனை செய்தவன், " ஒரு அஞ்சாயிரம்...இல்ல மென்னிய
முறுக்கறமாதிரி இருந்தா பத்தாயிரம்
அவ்வளவுதாங்க நம்மால முடியும் .
அதுக்கு மேலே சல்லிக் காசு தேறா
துங்க அம்மணி !"
" சரி, நீ அவ்வளவுதான் பணம் தேறு
ம்னு சொன்னியா?"
" ஆமாங்க ! " மீண்டும் தலை சொறி
ந்தான் கிராமத்தான்.
உலகம் புரியாத அப்பாவியாக இருக்கிறானே என்று ஆதங்க ப்பட்டவர்,." அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க ?" என்று கேட்டார்.
" அந்தப் பணத்துக்கு என்னவோ ஆறுக்கு மூணு அடி நெலமாமே! அந்த அளவுக்குதான் கெடைக்கும்னு தீர்த்துச் சொல்லிட்டாங்க...அத்தக் கேட்டு சில பேர் சிரிச்சாங்க.
" அப்படியா ?"
" ஆமாங்க அம்மணி ! அதுவும் நெலம்
எங்கயோ கண் காணாத தூரத்தில
இருக்குதாம். அவங்க கொடுக்கிற தம்மாத் துண்டு நெலத்த வச்சிக்கிட்டு நான் என்னங்க செய் யறது.. வாணா முன்னு சொல்லிட்டு வந்திட்டேன் "என்றபடி நகர்ந்தான் கிராமத்து ஆசாமி.
' ஐயோ பாவம் !' முணு முணுத்தப்படி
அந்தப் பெண்மணி படியேறினார்.
வி.கே.லக்ஷ்மிநாராயணன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?