எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனத்தின் முதல் ஷோரூம் மும்பையில் திறப்பு
Jul 16 2025
10

உலகின் முன்னணி மின்வாகன உற்பத்தி நிறுவனமாக உள்ள டெஸ்லா நிறுவனம் இந்தியாவிலும் தனது விற்பனையை தொடங்க உள்ளது. இதற்காக மும்பையில் உள்ள தனது முதல் ஷோரூமை டெஸ்லா நிறுவனம் திறந்துள்ளது. மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இந்த ஷோரூமை திறந்து வைத்தார். மும்பை குர்லா பகுதியில், ஆப்பிள் ஸ்டோர் அருகே 4,000 சதுர அடியில் டெஸ்லா நிறுவனத்தின் மையம் அமைக்கப்பட்டுள்ளது
மும்பையை பொறுத்தவரை இந்தியாவின் நிதி மற்றும் வணிகத் தலைநகராக மட்டுமல்லாமல், உயர் வருமானம் கொண்ட வாடிக்கையாளர்கள் மற்றும் மேம்பட்ட இவி சார்ஜிங் கட்டமைப்பு உள்ளது. இதனால், ஏற்கெனவே மின்சார வாகனங்களுக்கான முக்கிய சந்தையாக மும்பை உள்ளது. இதையே காரணமாகக் கொண்டு, டெஸ்லா தனது இந்தியா வர்த்தகத் திட்டத்தின் முதல் கட்டமாக மும்பையை தேர்வு செய்துள்ளது.
இந்த ஷோரூம், வாடிக்கையாளர்களுக்கு டெஸ்லா வாகனங்களை நேரடியாகப் பார்வையிட்டு ஆர்டர் செய்யும் வசதி தரும். வாகனங்களின் தொழில்நுட்ப அம்சங்கள், தனிப்பயன் விருப்பங்கள், பேட்டரி தொழில்நுட்பம் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி நேரடியாக அறிந்து கொள்ள முடியும். டெஸ்லா தனது பிரபலமான மாடல் ஒய் மாடல்களை முதற்கட்டமாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிகிறது.
இந்த காரின் விலை இந்திய சந்தையில் ரூ.58.89 லட்சத்தில் இருந்து 67.89 லட்ச ரூபாய் வரையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் குறைந்தபட்சம் 500 கிலோ மீட்டர் தொலைவு வரை செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?