🌹🌹🌹🌹🌹🌹🌹
கையூட்டு பெறுவோரை
கைப்பூட்டு போடுகின்ற
காவல் தெய்வங்கள்
தன்னூட்டு பெற்று
தனிவழி அனுப்புகின்ற
தயவுள்ளம் மாறனும்.
சட்டங்கள் படித்து
சமத்துவம் பேசிடும்
வழக்குறை வாதங்கள்
வாய்நிறைப் பேதங்கள்
சாட்சியும் காட்சியும்
பார்த்திடும் நீதியரசர்கள்
மனசாட்சி கொண்டே
தனதாட்சி செய்யணும்
உள்ளாட்சி ஊராட்சி
ஒன்றிய கூட்டாட்சி
தனியாக அன்பளிப்பு
தாணியாக் குவிப்பு
வட்டாட்சி அலுவலக
வாசலும் வரிக்கேட்கும்
எந்தாட்சி வந்தாலும் இந்தாட்சி மாறாது
வந்தாச்சி வழங்கிடு.
வார்த்தை மாறனும்
வேலைவாய்ப்பு அலுவலும்
தேவைகள் பூர்த்தியாக்கி
சேவையைச் செய்திட
சேவகம் செய்யணும்
எதிர்நின்று இயங்கும்
உதிரிகளை ஒதுக்கணும்
பணியிடங்கள் நிறப்ப
பணமூட்டை அவிழ்க்க
பாசமாய் பேசியே
வேடமிடும் தரகர்களை
தள்ளி நிறுத்தி
துள்ளித் தூரத்தணும்
திறணாய்வு செய்து
திருப்பி விரட்டணும்
திரைமறைவு பணவுறவு
திருத்தியே ஆகணும்.
தனியான ஒருவரின் உரிமையும் ஊதியமும்
ஒழுங்காய் வழங்கிட
ஒன்றியே நிற்கணும்.
உரிமையைக் காத்து
ஊழலை ஒழித்தாலே
வறுமைநிலை மாறிடும்
வாழ்நிலை உயர்ந்திடும்.

கவிஞர். வடுவூர்.
சீ. திருநாவுக்கரசு.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?