மாடுகள் கட்டி ஏர்பூட்டி
மடையை திறந்து நீர் பாய்ச்சி
நாற்றை நட்ட நாட்களினி
நம்மில் வருமோ தெரியலையே!
காடுகள் அமைத்து காப்பாற்றி
கடு வெயில் தணிக்கும் நிழலாக்கி
காய்கனி பறித்து உண்டதெல்லாம்
கனவாய் போமோ அறியலையே!
ஏடுகள் எடுத்து எழுத்தாக்கி
என்தமிழ் தாயின் கழுத்தாக்கி
பாடுதல் செய்தனர் முற்காலம்
பசுமை நிறைந்திடும் பொற்காலம்!
வீடுகள்ஆனது விளைநிலமோ -இது
விளையும்பயிர்களின் கொலைகளமோ!
மீண்டுமுழவு தொழில் வருமோ-இல்லை
மீளா துயரில் ஆழ்த்திடுமோ!

வெ. தமிழழகன் எம்ஏ. பிஎட்,
சேலம்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%