உலக நாடுகள் மீதான வர்த்தக போர்: தன்னையே அழித்துக்கொள்ளும் டிரம்ப்

உலக நாடுகள் மீதான வர்த்தக போர்: தன்னையே அழித்துக்கொள்ளும் டிரம்ப்

வாஷிங்டன், ஆக. 9–


உலக நாடுகளுடன் வர்த்தக போரை ஏற்படுத்தியதன் மூலம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறார் என்று அமெரிக்காவின் பிரபல பொருளதார நிபுணர் ஸ்டீவ் வான்கே எச்சரித்துள்ளார்.


உலகில் கிட்டத்தட்ட 90க்கும் அதிகமான நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய வரிகளை விதித்துள்ளார்.


இந்தியா மீதும் 50 சதவீதம் வரியை விதித்து இருக்கிறார்.


இந்த நிலையில் உலக நாடுகளுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கைக்கு அந்நாட்டில் இருக்கும் பிரபல பொருளாதார நிபுணர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்நாட்டின் பிரபல பொருளாதார நிபுணரும், பேராசிரியருமான ஸ்டீவ் வான்கே கூறியுள்ளதாவது;


அவரின் (டிரம்ப்) அறிவிப்பு முற்றிலும் தவறானது. தன்னைத் தானே அழித்துக் கொண்டு எதிரியுடன் ஒருபோதும் மோதக்கூடாது என்பது மாவீரன் நெப்போலியனின் அறிவுரை.


இந்த விஷயத்தில் டிரம்ப், நெப்போலியனின் ஆலோசனையைத் தான் பின்பற்ற வேண்டும்.


ஆனால், டிரம்ப் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறார் என்று நான் நினைக்கிறேன்.


இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் மோடி, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இருவரும் இன்னமும் காத்திருக்க வேண்டும்.


அதற்கு காரணம், டிரம்பின் நடவடிக்கைகள் எல்லாம் நிலைகுலைந்து விடும் என்பது தான் என தெரிவித்துள்ளார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%