கம்போடியா எல்லையில் கண்ணிவெடியில் சிக்கி தாய்லாந்து ராணுவ வீரர்கள் 3 பேர் படுகாயம்
Aug 11 2025
11

பாங்காக்,
தென்கிழக்கு ஆசிய பகுதியில் அமைந்த தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே நீண்டகால மோதல் போக்கு நிலவி வருகிறது.
இரு நாடுகளின் எல்லையில் தா முயென் தாம் என்ற கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு இரு நாடுகளும் உரிமை கோருகின்றன. இதுதொடர்பாக கடந்த மே மாதம் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதி கொண்டனர். இதில் கம்போடியா ராணுவ வீரர் உயிரிழந்தார். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தது. கடந்த மாதம் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடந்த போரில் 43 பேர் உயிரிழந்தனர். இரு நாட்டு எல்லையில் இருந்தும் சுமார் 3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த போரின்போது எல்லையில் கண்ணிவெடிகள் நிலத்தில் பதித்து வைக்கப்பட்டன. 5 நாட்கள் நடந்த போர் பேச்சுவார்த்தைக்குப்பின் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், கம்போடியா எல்லையில் கண்ணிவெடியில் சிக்கி இன்று 3 தாய்லாந்து வீரர்கள் படுகாயமடைந்தனர். இருநாட்டு எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தாய்லாந்து வீரர்கள் கண்ணிவெடியில் சிக்கினர். இந்த கண்ணிவெடி கம்போடியாவால் பதித்து வைக்கப்பட்டதாக தாய்லாந்து குற்றஞ்சாட்டியுள்ளது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?