இறகு பந்து விளையாடியபோது மாரடைப்பால் இளைஞர் மரணம்

இறகு பந்து விளையாடியபோது மாரடைப்பால் இளைஞர் மரணம்

ஹைதராபாத்:

ஹைத​ரா​பாத்​தில் இறகு பந்து (பாட்​மிண்​டன்) விளை​யாடிக் கொண்​டிருந்த 25 வயது இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்​பட்டு உயி​ரிழந்​துள்​ளார். ஹைத​ரா​பாத்​தின் நாகோல் உள் விளை​யாட்டு அரங்​கில் ராகேஷ் (25) என்​பவர் தனது நண்​பர்​களு​டன் நேற்று காலை​யில் பாட்​மிண்​டன் விளை​யாடிக் கொண்​டிருந்​தார்.


அப்​போது கீழே விழுந்த இறகு பந்தை எடுத்து மீண்​டும் ஆட முயற்​சித்​த​போது, அப்​படியே கீழே சரிந்​தார். உடனே நண்​பர்​கள் ஓடிச்சென்று அவருக்கு முதலுதவி சிகிச்​சைகள் செய்து அரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்கு கொண்டு போய் சேர்த்​தனர். அங்கு அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், ராகேஷ் ஏற்​கெனவே மாரடைப்பு ஏற்​பட்டு இறந்து விட்​டதை உறு​திப்​படுத்​தினர்.


தின​மும் உடற்​ப​யிற்சி செய்​ததுடன் இறகு பந்து ஆடு​வதை​யும் வழக்​க​மாக கொண்​டிருந்த ராகேஷ் ஏன் இறந்​தார்? என்ற கேள்வி அனை​வருடைய மனதி​லும் எழுந்​துள்​ளது. ராகேஷின் மரணம் அவரின் குடும்​பத்​தாரை வெகு​வாக புரட்​டிப் போட்​டுள்​ளது.


ராகேஷ் விளை​யாடிக் கொண்​டிருந்​த​போது திடீரென சரிந்து கீழே விழுந்து இறக்​கும் வீடியோ தற்​போது தெலங்​கா​னா, ஆந்​திர மாநிலங்​களில் வைரலாக பரவி அதிர்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளது. சமீப கால​மாக வயது வித்​தி​யாசமின்றி சிறு​வர் முதல் பெரியவர்கள் வரை மாரடைப்பு ஏற்​படு​கிறது. குறிப்​பாக கரோனா நோய் பரவலுக்கு பின்​னர் மாரடைப்பு அதி​கரித்து விட்​ட​தாக மக்கள் கருதுகின்​றனர்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%