எண்சீர் மண்டிலம்.
இல்லார்க்கு
இருப்பவர்கள்
கொடுக்க வேண்டும்
இல்லையென்று
சொல்லாமல்
உதவ வேண்டும்!
நல்லாரே
என்றபெயர்
வாங்க வேண்டும்
நனிசிறந்த
பெரியோராய்
வாழ வேண்டும்!
எல்லோரும்
நல்லோராய்க்
காண வேண்டும்
ஏற்றமுடன்
திகழ்ந்தேதான்
பேண வேண்டும்!
சொல்லாமல்
அறந்தன்னைச்
செய்ய வேண்டும்
சுறுசுறுப்பாய்
அறந்தன்னைப்
புரிய வேண்டும்!
இல்லார்க்கு
இன்பத்தை
விளைக்க வேண்டும்
ஈடில்லாத்
தொண்டினையே
செய்ய வேண்டும்!
இல்லையென்று
சொல்லாமல்
வாழ வேண்டும்
ஈகையிலே
நனிசிறந்து
விளங்க வேண்டும்!
பொல்லாப்பே
இல்லாமல்
வாழ வேண்டும்
பொலிவான
வாழ்வினையே
சூழ வேண்டும்!
இல்லாதார்
வாழ்வினிலே
இன்பம் வேண்டும்
ஏற்றத்தை
எழிலாக
அமைக்க வேண்டும்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?