ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்

ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்


பேருந்தில் எத்தனை முறை 

மாறி உட்காரச் சொன்னாலும் 

சலிக்காமல் பெண்களுக்காக 

உட்காரும் ஆண்களுக்கு வாழ்த்துக்கள்.


சினிமாவோ திருமணமோ எங்கு 

சென்றாலும் குழந்தையைத் தூக்கி 

வைத்துப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்கும் ஆண்களுக்கு வாழ்த்துக்கள்


முப்பத்தைந்து வயது வரையிலும் 

குடும்ப சூழ்நிலை காரணமாக

திருமணம் செய்து கொள்ளாமல்

மாடாய் உழைத்துக் கொண்டிருக்கும்

ஆண்களுக்கு வாழ்த்துக்கள்


கிரிக்கெட் மேட்ச் மற்றும் செய்திகளை

சீரியல் இடைவேளையில் மட்டும் 

பார்த்து மனைவிக்காக விட்டுக்

கொடுக்கும் ஆண்களுக்கு வாழ்த்துக்கள்


தான் சம்பாதிக்கும் பாதிப் பணத்தை

தன் தங்கையின் திருமணத்திற்கு

சேர்த்து வைக்கும் நல்உள்ளங்களான

ஆண்களுக்கு வாழ்த்துக்கள்


ஊருக்கே ராஜா ஆனாலும் 

மனைவியிடம் மட்டும் குடும்பத்துக்காக 

அடங்கி இருக்கும் அனைத்து

ஆண்களுக்கு வாழ்த்துக்கள்


ஆண்களுக்கும் வெட்கம் உண்டு

தன் முதல் காதலிக்கு காதல் கடிதம் கொடுக்கும் நேரத்தில்...


ஆண்களுக்கும் கூச்சம் உண்டு

திருமணப் பேச்சை அம்மா முதன்முதலாய் சொல்லும் நேரத்தில்....‌


ஆண்களுக்கும் மாதாந்திர வலி உண்டு

மாசக்கடைசி மூன்று நாளில் குடும்பத்தை ஓட்டும் நேரத்தில்...


ஆண்களுக்கும் பிரசவ வலி உண்டு

மனைவி தலைப்பிரசவத்தில் உள்ளே

இருக்கும் நேரத்தில்...


ஆண்களுக்கும் பயம் உண்டு

நேர்முகத்தேர்வில் குடும்பப் பொறுப்பை ஏற்று அவர்கள் கேட்கும் நேரத்தில்...


ஆண்களுக்கும் கற்பு உண்டு

காதலி இருக்கும் போது கண்டவள்

பேசும் நேரத்தில்..‌


ஆண்களுக்கும் திமிர் உண்டு

அனைத்து வலிகளையும் சேர்த்து

அழும் நேரத்தில்..‌


ஆண்களுக்கும் அழகு உண்டு

ஆங்காங்கே அரும்பு மீசை 

முளைக்கும் நேரத்தில்....


ஆண்களுக்கும் மானம் உண்டு

அலுவலகத்தில் நாலு பேர் முன்னே

மானேஜர் திட்டும் நேரத்தில்..‌


ஆண்களுக்கும் அழுகை உண்டு

பல ஏமாற்றங்களை நெஞ்சில்

சுமந்த நேரத்தில்...‌


ஆண்களுக்கும் தாய்மை உண்டு

தன் மகளை ஆசையாக

கொஞ்சும் நேரத்தில்...


ஆண்களுக்கும் நாணம் உண்டு

காதல் சொன்னதும் காதலி முகம்

பார்க்கும் நேரத்தில்....


ஆண்களுக்கும் பொறுப்பு உண்டு

தனக்கு சாப்பிடாமல் தன் குழந்தைக்கு

ஊட்டும் நேரத்தில்..‌‌


ஆண்களுக்கும் மனசு உண்டு

அந்த மனதில் ஈரம் உண்டு

அந்த ஈரத்தில் பாசம் பரிவு உண்டு

அந்த பரிவில் மனைவி மக்கள் உண்டு

அந்த மனைவியிடம் உயிர் உண்டு

அந்த உயிரில் அவள் மட்டுமே உண்டு.


😊

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News