திருமலைக்கு செல்ல இனி ஃபாஸ்டேக் கட்டாயம்: ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் அமல்

திருமலைக்கு செல்ல இனி ஃபாஸ்டேக் கட்டாயம்: ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் அமல்

திருமலை:

திருப்ப​தியி​லிருந்து அலிபிரி வழி​யாக திரு​மலைக்கு செல்ல இனி ஃபாஸ்​டேக் கட்டாயம் என திரு​மலை திருப்​பதி தேவஸ்தானம் உத்​தர​விட்​டுள்​ளது. திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசனம் செய்ய நாடு முழு​வ​தி​லும் இருந்து வரும் பக்​தர்​கள் ரயில் அல்​லது விமானத்​தில் வந்​தா​லும், அவர்​கள் கார், ஜீப், வேன் போன்​றவற்​றின் மூலம் திரு​மலைக்கு செல்​கின்​றனர். மேலும் பலர் தங்களது சொந்த கார்​கள் மூலம் குடும்​பத்​தா​ருடன் திரு​மலைக்கு வரு​கின்​றனர்.


இந்​நிலை​யில், வரும் 15-ம் தேதி முதல் திரு​மலைக்கு வாக​னங்​களில் வரும் பக்​தர்​கள் கண்​டிப்​பாக அவர்​களின் வாக​னங்​களில் ஃபாஸ்​டேக் இருக்​கும்​படி பார்த்து கொள்ள வேண்​டும் என தேவஸ்​தானம் வெளிட்​டுள்ள அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ளது.


அந்த அறிக்​கை​யில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: பக்​தர்​களின் பாது​காப்பு கரு​தி​யும், கூட்ட நெரிசலை தவிர்க்​க​வும் அலிபிரி சோதனைச்​சாவடி வழி​யாக திரு​மலைக்கு கார், ஜீப், வேன்​களில் செல்​லும் போது ஃபாஸ்​டேக் கண்​டிப்​பாக இருக்க வேண்​டும். இது வரும் 15-ம் தேதி முதல் அமல்படுத்​தப்பட உள்​ளது. ஃபாஸ்​டேக் இல்​லாத வாக​னங்​கள் திரு​மலைக்கு செல்ல அனு​ம​திக்​கப்பட மாட்​டாது.


அப்​படி ஃபாஸ்​டேக் இல்​லாத வாக​னங்​கள், ஃபாஸ்​டேக் பெறு​வதற்​காக, அலிபிரி சோதனைச்​சாவடி அருகே ஐசிஐசிஐ வங்​கி​யின் ஃபாஸ்​டேக் விநி​யோக மைய​மும் அமைக்​கப்​படு​கிறது. இதன் மூலம் ஃபாஸ்​டேக் பெற்று கொண்ட பின்​னரே அந்த வாக​னம் திரு​மலைக்கு அனு​ம​திக்​கப்​படும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%