ஆபத்திற்கு பாவமில்லை

ஆபத்திற்கு பாவமில்லை



   " என் தன்மானத்திற்கு வந்த சோதனை என் நல்ல பெயருக்கு வந்த கலங்கம் இதை தீர்க்காமல் ஓய மாட்டேன் என்று தீச்சட்டி எடுத்து மாரியம்மன் கோவிலில் வேண்டி நின்றாள் தேவி .


      பத்து நாட்களாக மனக்குமுறலில் வெந்து தவித்த தேவி மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி எடுத்த பிறகு தான் சாந்தமாகி போனாள் .


      தேவி வீட்டு வேலைக்காரியாக ராசாத்தி அம்மாள் வீட்டில் பத்து வருஷமா வேலை செய்கிறாள் , அத்தோடு அந்த ஏரியாவில் மூன்று வீட்டில் வேலை பார்க்கிறாள் .


       அன்று வைரத்தோடு காணவில்லை என்று இராசாத்தி அம்மாள் திருட்டுப் பட்டம் கட்டி வீட்டு வேலையை விட்டு நிறுத்தி விட்டாள் தேவியை .


      தேவி ஏழை தான் ஆனால் கோழை இல்லை திருடும் அளவுக்கு அல்ப பேதையும் இல்லை .


       ஆனாலும் ராசாத்தி அம்மாள் செய்த செயல் தாங்க முடியவில்லை தேவிக்கு . தேவிக்கு வயது முப்பது . ஒரு பெண் குழந்தைக்கு தாய் இருந்தும் கட்டுக் கோப்பான தேகம்.


        இராசாத்தி அம்மாள் பெண்ணுக்கு திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் குழந்தை இல்லை . இப்போது ஒரு வருடமாக தன் தாய் இராசாத்தி வீட்டில் வந்து தங்கி இருந்தாள் மாலதி .


      மாலதி மீது இருந்த கோபம் ஏக்கம் மயக்கம் மருமகன் அடிக்கடி தன் மாமியார் வீட்டுக்கு மனைவியை பார்க்க வந்து போவது உண்டு.மாலதி மீது இருந்த கோபம் ஏக்கம் மயக்கம் தேவி மீது விழுந்தது சுரேஷ்க்கு .


        தன் மகள் தாயாகவில்லை என்ற ஆதங்கமும் மருமகன் சுரேஷ் பார்வை தேவி மீது தவறாக விழுவதும் தான் இராசாத்தி அம்மாளின் வைரத்தோடு நாடகம் .


     தீச்சட்டி எடுத்த தேவி மாரியம்மா உண்மையை சொல்லுவான்னு நம்பினாள் . அதுக்காக காத்து இருந்தாள்.


     சுரேஷ் நைசா தேவி வீட்டுக்கு வந்து நலம் விசாரித்து தேவி மீது கையை வைத்தான் . அடி புரட்டி எடுத்து அனுப்பி விட்டாள் தேவி .


    இந்த செய்தி மெதுவாக இராசாத்தி அம்மாளுக்கு தெரிய வர ஒரு நாள் ரகசியமா கொஞ்சம் பத்தாயிரம் பணம் எடுத்துக்கிட்டு தேவியை போய் பார்த்தாள் .


       இப்ப தெரியுதா தேவி என் வைரத்தோடு நாடகம் ஏழையா இருந்தாலும் நீ மானத்தோட நேர்மையா வாழறவ என் மருமகனால உன் மானம் போயிடக் கூடாது , உன் குடும்பம் நாசமாயிடக் கூடாது அதுக்கு உன் மேல திருடடு

 பட்டம் கட்டினா தப்பில்லை என்று தான் உன்னை என் வீட்டை விட்டு வெளியில அனுப்பினேன் , இது புரியாதா உனக்கு என்றாள்.


      மேலும் பத்தாயிரம் பணம் கொடுத்து விட்டு என் மகள் கணவரோடு அவர் வீட்டுக்கு போன பிறகு மீண்டும் என் வீட்டு வேலைக்கு உன்னை கூப்பிடறேன் தேவி என்றாள் .


         தன் மானம் கற்பு காத்த மாரியம்மனாய் இராசாத்தி காட்சி தந்தாள் தேவிக்கு.


        பத்தாயிரம் பணத்தை கையில் வாங்கிய தேவி பெரியம்மா என்று அழைத்தபடியே தன் கண்ணீல் நீர் கொட்ட சரிந்து இராசாத்தி அம்மாள் காலில் விழுந்தாள் . 


-சீர்காழி. ஆர். சீதாராமன் .


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%