ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் இந்தியா புதிய வரலாறு ; வெண்கலம் வென்றார் ரமேஷ்
Aug 12 2025
11

ஆசிய அலைச்சறுக்கு (சர்பிங்) சாம்பியன்ஷிப் போட்டி கள் சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், 7ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று ஆடவர் ஓபன் பிரிவில் இந்திய வீரர் ரமேஷ் புதிஹால் (12.60 புள்ளிகள்) வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். இதன் மூலம் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். மேலும் ஆசிய அளவிலான அலைச்சறுக்குப் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்த பிரிவில் தென்கொரியாவின் ஹீஜே (15.17 புள்ளிகள்) மற்றும் இந்தோனேசியாவின் பஜார் அரியானா (14.57 புள்ளிகள்) ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங் களை வென்றனர். அதே போல மகளிர் ஓபன் இறுதிப் போட்டியில் ஜப்பானின் அன்ரி மாட்சுனோ 14.90 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார். 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் பிரிவில் தென் கொரியா வின் கனோவா 14.33 புள்ளிகளுடன் தங்கம் வென்ற அதே வேளையில், 18 வயதுக்குட்பட்ட சிறுமியர் பிரிவில் சீனாவின் சிகி யாங் 14.50 புள்ளி களுடன் தங்கப் பதக்கம் கைப்பற்றி னார். இந்திய அலைச்சறுக்கு சம்மேள னத்தின் தலைவர் அருண் வாசு கூறுகையில்,”ஆசிய சாம்பி யன்ஷிப்பில் இந்திய அலைச்சறுக்கு வீரர் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் மூவர்ணக் கொடியை ஆசிய சாம்பியன்ஷிப் மேடையில் ஏற்றிச் செல்வதைக் காண்பது இந்திய அலைச்சறுக்குக்கு பெருமையான தருணம்” எனக் கூறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?