6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 334 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் நீக்கம்: தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி, ஆக.10-
6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 334 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை தேர்தல் கமிஷன் அதிரடியாக நீக்கியுள்ளது.
எந்த ஒரு அரசியல் கட்சியும் தொடங்க வேண்டும் என்றால் முதலில் அந்த கட்சி, தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அந்த கட்சிகள் தேர்தல் கமிஷனின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இடம் பெற முடியும்.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்டு முதல் 6 ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. அவ்வாறு இல்லாத கட்சிகள் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
இதேபோல், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், தேர்தலில் நின்று குறிப்பிட்ட சதவீத வாக்கு சதவீதத்தையோ, குறிப்பிட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரையோ பெற்றால் அந்த கட்சிக்கு அங்கீகாரம் மற்றும் நிரந்தர சின்னம் ஒதுக்கப்படும்.
இந்த வகையில் இந்தியாவில் 2,854 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் இருந்தன.
இதில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாமல் உள்ள 334 அரசியல் கட்சிகள் சில, தேர்தல் கமிஷனின் நிபந்தனையான, பதிவு செய்யப்பட்ட 6 ஆண்டுகளில் எந்த தேர்தலிலும் நிற்கவில்லை. இதனால் அந்த 334 அரசியல் கட்சிகளையும், தேர்தல் கமிஷனின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதற்கான நடவடிக்கையை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது. இந்த கட்சிகள் அனைத்தும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவை.
தற்போதைய நிலையில் 6 அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளும், 67 அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளும், பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாமல் 2,520 அரசியல் கட்சிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?