அர்ச்சகர், ஓதுவார், தவில் – நாதஸ்வரம், வேதாகமம் பயிலும் 363 மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

அர்ச்சகர், ஓதுவார், தவில் – நாதஸ்வரம், வேதாகமம் பயிலும் 363 மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்



சென்னை, நவ.5–


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம், திவ்ய பிரபந்த பாடசாலை மற்றும் வேத ஆகம பாடசாலை ஆகிய 18 பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாக பயிற்சி பெறும் 297 மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை ரூ.10,000 வழங்கினார்.


மேலும் பகுதி நேரமாக பயிற்சி பெறும் 66 மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை ரூ.5,000 ஆகியவற்றை வழங்கிடும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகைக்கான வங்கி வரைவோலைகளை வழங்கினார்.


2025–2026ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், “அனைத்து பயிற்சிப் பள்ளிகளில் முழுநேர வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக 2022ம் ஆண்டு வரை ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. 2023ம் ஆண்டு முதல் ரூ.3,000 ஆகவும், 2024 ஆண்டு முதல் ரூ.4,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். அனைத்து பயிற்சிப் பள்ளிகளில் பகுதி நேர வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக 2023ம் ஆண்டு முதல் ரூ.1,500 ஆக வழங்கப்பட்டு வந்ததை, 2024ம் ஆண்டு முதல் ரூ.2,000 ஆக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், இந்தத் தொகைகளை முதலமைச்சர் இன்று வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் முனைவர் துரை. இரவிச்சந்திரன், சி.ஹரிப்ரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%