news Breaking News
clock

செவ்வாய்பேட்டையில் ரெயில்வே மேம்பாலப் பணிகள்: கலெக்டர் பிரதாப் நேரில் ஆய்வு

செவ்வாய்பேட்டையில் ரெயில்வே மேம்பாலப் பணிகள்: கலெக்டர் பிரதாப் நேரில் ஆய்வு



திருவள்ளூர், நவ. 5–


செவ்வாய்பேட்டையில் நடைபெற்ற வரும் ரெயில்வே மேம்பாலப் பணிகளை கலெக்டர பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.


திருவள்ளுர் வட்டம், செவ்வாய்பேட்டையில் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் ரூ.8.1 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 15 கட்டுமானப் பணிகளையும், வேப்பம்பட்டில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 14 கட்டுமானப் பணிகளையும், ரூ.56 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 13 கட்டுமானப் பணிகளையும், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ரூ.44.5 கோடி மதிப்பீட்டில் அத்திப்பட்டு நந்தியம்பாக்கம் இடையே கட்டடப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளையும் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.


திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 விண்ணப்பப் படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர் வழங்கினார். அதனை தொடர்ந்து திருவள்ளுர் வட்டம், காக்களுர் ஊராட்சி மற்றும் ஆவடி வட்டம், திருநின்றவூர் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 விண்ணப்பப் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, காக்களுர் அரசினர் தொடக்கப்பள்ளியிலும் பொன்னேரி வட்டம், ஊராட்சி ஒன்றிய அரசினர் நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திலும், திருநின்றவூர் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இவ் ஆய்வின் போது, ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், இணை இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஸ்ரீராம், உதவி வாக்கு பதிவு அலுவலர், திருவள்ளூர் வட்டாட்சியர் பாலாஜி, நெடுஞ்சாலைகள் துறை உதவி செயற்பொறியாளர் மணிவண்னன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், உதவி வாக்கு பதிவு அலுவலர்/பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம், திருநின்றவூர் நகர்மன்ற தலைவர் உஷாராணி ரவி, வாக்கு பதிவு அலுவலர், ஆவடி மாநகராட்சி துணை ஆணையர் மாரிசெல்வி, உதவி வாக்கு பதிவு அலுவலர், உதவி வாக்கு பதிவு திருநின்றவூர் நகராட்சி ஆணையர் ஜீவிதா, ஆவடி வட்டாட்சியர் கண்ணன் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News